படகு விபத்தில் 21 பேர் பலி

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. படகு மூழ்கும் போது அதில் சுமார் 50 பேர் இருந்ததாகவும், ஆனால் அதில் 25 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் அங்குள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.