அரை சொகுசு பேருந்துகள் தொடர்பில் முடிவு?
அரை சொகுசு பேருந்துகள் அடுத்த மாதத்தின் பின்னர் ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவுக்கு 26 புதிய பஸ்கள்
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பஸ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் திரு.பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது. நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பஸ்கள் இதன்போது கையளிக்கப்பட்டன. மேலும் இந்த புதிய பஸ்களை தோட்ட மற்றும் கிராமப்புற வீதிகளில் பயணிக்கவும், அதன் மூலம் […]
பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு ஆலோசனை
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 80 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைவடைய உள்ளதுடன், புதிய பஸ் கட்டணம் அமல்படுத்தப்படும். மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் ஏனைய பஸ் கட்டணங்கள் குறைப்பு தொடர்பான விரிவான தகவல்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விரைவில் அறிவிக்கப்பட […]
தேவைக்கேற்ப பேருந்துகள்
பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத துறையினர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட்டுள்ளதால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் பொது மக்களின் நலன்கருதி மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]
தனியார் பஸ் உரிமையாளர்கள் விசேட அறிவிப்பு
எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் இடம்பெறும் தேர்தல் பேரணிகள் காரணமாக பேருந்து தொழிற்துறைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.