சீனா இலங்கைக்கு உறுதி

இலங்கைக்கு நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க தயாராக உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, சீன அமைச்சர் வேங் டொங்வேயும் (Wang Dongwei), இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, இலங்கைக்கான ஒத்துழைப்பை சீனா மீள உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே, சீன அமைச்சர் வேங் டொங்வேய் […]

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடை நன்கொடை

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன்னினால் ஜனாதிபதி முன்னிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் டிரான் அலஸிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதியும் நன்கொடைகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் […]

சீனாவின் புதிய பிரதமர்

சீனாவின் புதிய பிரதமராக லீ கியாங் (Li Qiang) அறிவிக்கப்பட்டிருக்கிறார். புதிய பிரதமராகச் சீன பாராளுமன்றம் இன்று அவரை உறுதிப்படுத்தியது. முன்னையப் பிரதமர் லீ கெச்சியாங்கின் இரண்டு தவணைப் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து லீ கியாங் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சீன பாராளுமன்றத்தில் இன்று அவருக்கு ஆதரவாக 2,936 பேர் வாக்களித்தனர். மூன்று பேர் அவரை எதிர்த்து வாக்களித்தனர். எட்டுப் பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

சீன எக்ஸிம் வங்கியின் நிதி உத்தரவாதக் கடிதம் கையளிப்பு

சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். எதிர்காலத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் சீன பெரு நிறுவனங்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் பிரதித் தூதுவர் தெரிவித்தார். இதன் போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும்

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், […]

சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி

202, 2023 ஆண்டுகளில் சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டியிருந்த கட்ன் மற்றும் அதற்கான வட்டியை பெற்றுகொள்ளாதிருக்க சீனா முன் வந்துள்ளது. இது தொடர்பில் இலங்கை நிதியமைச்சை தெளிவுப் படுத்தியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிக்ஹிங் தெரிவித்துள்ளார். சலுகை அடிப்படையில் மேற்படி உதவியை வழங்குவதாக அவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். இந்த சலுகை இலங்கைக்கு குறுகியகால உதவியகாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உதவியை சீனாவின் எக்சிம் வங்கியூடாக வழங்கவுள்ளதாக […]

அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவை கைவிட்டனர். ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் […]

பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டன் பிளிங்கன் சீனாவுக்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வருடங்களாக தடைப்பட்டுள்ள உயர் மட்ட கலந்துரையாடலில் பிளிங்கன் பங்கேற்க இருந்த நிலையில் தனது விஜயத்தை அவர் இரத்து செய்துள்ளார். எனினும் அமெரிக்க வான் பரப்பில் சீனாவின் கண்காணிப்பு பலூன்கள் பறப்பதால் பிளிங்கன் தனது விஜயத்தை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான சீனாவின் செயற்பாடு அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என சாடியுள்ள பிளிங்கன் […]

IMF – China

IMFடம் இருந்து இலங்கை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என சீனா மீண்டும் தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாஓ நின்க் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் இலங்கை விடயத்தில் சீனா தலையீடு செய்வதை நிறுத்தி, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்அண்மையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் சீன […]