மாடுகளின் திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளது

நீண்டகாலமாக குறைந்த மட்டத்தில் இருந்த கறவை மாடுகளின் திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளதாக மாகாண விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாய அமைச்சினால் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த நிலை அதிகரித்துள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.