அரசியல் என்பது சேவை – ஜீவன்

“ அரசியல் என்பது மக்களுக்கு சேவைசெய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன். எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை என்னிடம் தாராளமாக எடுத்துக்கூறலாம். என்னால் முடிந்தவற்றை செய்து தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் […]

ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை இன்று (013) மேற்கொள்கின்றார். பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நாளை (02) நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கின்றார். இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமைச்சர் இந்தியாவில் தங்கவுள்ளார். இந்த இலங்கை குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் […]

வழங்கிய வாக்குறுதி

மாத்தளை களுதாவளை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் சார்பில், மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஷால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்கான வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாத்தளை, களுதாவலை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை சூழவுள்ள பகுதிகளில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. குடிநீர் […]

ஜீவன் உடன் பணிப்புரை

பதுளை, எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குறைப்பாடுகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அண்மையில் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அங்கு நிலவும் சில குறைப்பாடுகள் சம்பந்தமாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இவற்றை உடன் நிவர்த்தி […]

வன்முறை அரசியல் கலாச்சாரம் வேண்டாம் – ஜீவன்

“மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன். தற்போது கூட மலையக மக்களின் குரலாகவே அமைச்சரவையில் செயற்பட்டு வருகின்றேன். ”  என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ” மலையகத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தவே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பங்கேற்றேன். இதனை சிலர் விமர்சிக்கலாம். ஆனால் மக்களுக்காகவே என்பது அரசியல் […]

மலையக வீடமைப்பு திட்டம்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட  உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில்,  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மூவர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், நீர்வழங்கல் மற்றும் தோட்ட  உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்,  திட்டமிடல் பிரிவு அதிகாரிகள்,  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர், புதிய கிராமங்கள் […]

விமர்சன அரசியல் தேவையில்லை – எம்.பி. ராமேஷ்வரன்

” 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி நடைபோட்டதுபோல, இம்முறையும் காங்கிரஸ் வெற்றிவாகை சூடும். ஏனெனில் அன்றும் இன்றும் என்றும் மக்கள் சக்தி எம்பக்கமே.”  – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆரம்பக் கட்ட பிரச்சார கூட்டம் இறை வழிபாடுகளுடன் நேற்றைய தினம் (14.02.2023) கொட்டகலை பகுதியில் ஆரம்பித்து […]

மலையக தமிழர்- பாஜக

இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான உங்கள் அவதானம் அதிகரிக்க வேண்டும் <பாஜக அமைச்சர் முருகன்,  அண்ணாமலை ஆகியோரிடம் மனோ தெரிவிப்பு> இந்தியாவை எந்த கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி  உங்கள் பாரதீய ஜனதா கட்சி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும்  பாரதீய ஜனதா கட்சியின் தமிழக கிளை தலைவர் கே. அண்ணாமலை ஆகிய நீங்கள் இருவரும்  உங்கள் […]

மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன்

” மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள […]

CWC

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களுடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆகியோர் யாழ் நூலகத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பொன்றும் இடம்பெற்றது