அபிவிருத்திக்காக நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும்

இலங்கை மக்களாக ஒன்றினைந்து பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் அபிவிருத்தியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டினார்.