“டெங்கு…”

நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11184 பேர் டெங்கு நோயாளர்கள்

வருடத்தில் மாத்திரம் 11184 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். புத்தளம், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்நாட்களில் அதிக டெங்கு நோயார்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை, பிலியந்தலை, இரத்மாலானை, கொத்தட்டுவ, மகரகம போன்ற பிரதேசங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக  தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.