கொட்டகலையில் இலங்கை மின்சார சபையின் நடமாடும் சேவை
கொட்டகலை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை மின்சார சபையின் ஹட்டன் கிளை காரியாலயத்தின் ஊடாக கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தானத்தில் 02/06/2022 நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. இந்நடமாடும் சேவையூடாக புதிதாக மின்சாரம் இணைப்பை மேற்கொள்ள இருப்பவர்கள்,மின்சார பட்டியல் தொடர்பான விபரங்கள்,மின்சார பட்டியலின் பெயர்மாற்றம்,பாதிக்கப்பட்ட தூண்களை மாற்றுதல் உட்பட மின்சார சபையூடாக முன்னெடுக்கப்படும் சகல வேலைகளும் செய்து தர உள்ளதாகவும் கொட்டகலை நகரத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கொட்டக்கலை வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம்
க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) நடைபெறும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்சார வினியோகத்தை துண்டிக்க வேண்டாம் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார சபைக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றும் 331,709 பேரின் மனித உரிமைகளை பாதுகாப்பது சகலரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். எனவே குறித்த காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு இலங்கை மின்சார சபையே […]