தபால் மூல வாக்கெடுப்பு…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவாவிடம் வினவியபோது, எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று […]
தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச அச்சகம் இணங்கியமைக்கு அமைய, உரிய தினத்தில் தபால் மூல வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்த […]
தபால் மூல வாக்களிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் நானூற்று அறுபத்தொரு மில்லியன் ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாளை நடைபெறும் அரசியல் கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.