காட்டுத் தீ
வெலிமட எரனவெல பகுதியில் நேற்று பரவிய காட்டுத் தீ கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஓரளவு கட்டுப்பத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். பிரதேசத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமான காட்டுத் தீ வேகமாக பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் தீ இன்றும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார். தீயால் அரச மற்றும் தனியார் காணிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.