G.Lக்கு பதிலாக?
பேராசிரியர் ஜி.எல் பீரிசை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க கட்சியின் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அண்மையில் கூடிய தமது கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அந்த பதவிக்கு பொருத்தமான பெயர்களை பரிசீலித்து வருவதாகவும் […]
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம்-GL
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் இன்று (20) நள்ளிரவு முதல் ஜனாதிபதிக்கு கிடைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரீஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஆகவே தனக்குள்ள குறித்த அதிகாரத்தை ஜனாதிபதி பாவிப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார். கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.