IMF குழு இலங்கைக்கு…
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று நாளை (11) முதல் மே 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதிக்கான முதல் மதிப்பீட்டிற்கு முன்னர், வழமையான ஆலோசனை நடவடிக்கையின் ஒரு படியாக அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசனும் இந்த விஜயத்தில் இணையவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.