இராணுவ பலத்தை வலுப்படுத்தும் இந்தியா

இந்தியா தனது இராணுவ பலத்தை வலுப்படுத்த தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் இலத்திரனியல் போர் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்கு அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த இராணுவ உபகரணங்கள் சுமார் 8.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து புதிய கொள்முதல்களும் இந்திய நிறுவனங்களிடமிருந்து பெறப்படவுள்ளன. பாகிஸ்தானும், சீனாவும் இராணுவ பலத்தை வளர்த்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்தியாவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.