ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் அதிரடியாக நீக்கம்
இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வாழ்வாதாரத்துக்காக வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த மலையக பெண்ணிடம் அடாவடித்தனமாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி ஒருவர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கண்டிப்பான உத்தரவின் பிரகாரமே, மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எழுத்துமூலம் மன்னிப்பு கோருவதற்கும் மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. மத்துரட்ட பெருந்தோட்ட […]
தொழில் அமைச்சுக்கு ஜீவன் தொண்டமான் கோரிக்கை
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரப்படவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட […]
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த சேவையைப் பெறலாம் – என்று இலங்கை தொழிலார் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரையானது காலத்தின் கட்டாய தேவையாகும். அதிலுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கவும் […]
கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட மஸ்கெலியா – ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களுக்கு இன்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கேட்டறிந்ததுடன், அவை தொடர்பில் தொழில் ஆணையாளருடனும் பேச்சு நடத்தினார். தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அவ்வாறு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெருந்தோட்டப்பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டு தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து அவற்றுக்கு […]
மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்
மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் களத்தில் இறங்கியாக வேண்டும். நெருக்கடியை கண்டு பின்வாங்கி நிற்பது ஏற்புடையதல்ல. அதனால்தான் நெருக்கடியான சூழ்நிலையில் அமைச்சு பதவியை ஏற்றேன். மாறாக பதவி ஆசையில் […]
ஜீவன் தொண்டமான்
ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்றதையடுத்து மலையக மக்கள் கொண்டாடினர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். இதனை கொண்டாடும் விதமாக அட்டன் மற்றும் கொட்டகலை பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மகிழ்ந்தனர். கொட்டகலை பகுதியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள்
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமானும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.