அமைச்சரவை வழங்கிய அனுமதி

நாவலப்பிட்டி – பஸ்பாகே கோறளை, ஹைன்போர்ட்  தோட்டக் காணியை வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கண்டி – நாவலப்பிட்டி, பஸ்பாகே கோறளையிலுள்ள 566 ஏக்கர்களுடன் கூடிய ஹைன்போர்ட்  தோட்டக் காணி, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கருத்திற்கொண்டு, குறித்த காணியில் 200 ஏக்கர் காணியை வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய ஆபத்தான இடங்களில் வசிப்பவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் […]

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.  

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 22,765 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை எளிதில் வழங்குவதற்காக சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் […]

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600-ஐ கடந்துள்ளது…

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600-ஐ கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு முன்னுரிமையளித்து மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். துருக்கியின் Hatay மாகாணத்தின் மருத்துவமனை ஒன்றுக்கு முன்பாக சடலங்கள் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டுள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது. துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 7,100 க்கு மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே 11 ஆண்டுகால போரினால் பேரழிவிற்குள்ளான சிரியாவில் தற்போதைய அனர்த்தத்தால் 2500-க்கும் அதிகாமானவர்கள் உயிரிந்துள்ளனர். மீட்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் […]