அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு அரசிலும் நாம் பலமான பங்காளியாக இருப்போம்.. – தமுகூ தலைவர்

அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கிறோம். எது எப்படி இருந்தாலும், அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு அரசிலும் நாம் பலமான பங்காளியாக இருப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு கூட்டம் கொழும்பு தெற்கு […]

தமிழ் முற்போக்கு கூட்டணி

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின்  இலங்கைக்கான விசேட தூதுவர் “ஜீபி” என்றழைக்கப்படும் கோபாலசுவாமி பார்த்தசாரதி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை  நேற்று கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்திய தூதரக இரண்டாம் செயலாளர் அசோக்குமார் உடனிருந்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி கூறியதாவது,  கொடுமையான நாட்களில் இலங்கை, இந்தியா, தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய அனைத்து தரப்புகளுக்கும் இடையே இயன்ற வரையில் நெகிழ்வு தன்மையுடன் சுழன்றோடி நம்பிக்கை தந்த கடும் பணிகளை ஆற்றியவர், திரு. கோபாலசுவாமி பார்த்தசாரதி. அந்த கொடும் நாட்களை கடந்து […]

தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது

அரசை மீறி, தேர்தல் நடத்த ஆணைக்குழுவுக்கு சக்தி இல்லை. – மனோ கணேசன் “தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது. ஆகவே தேர்தல் நடத்த வேண்டுமானால், நீங்கள் தெருப்போராட்டம் செய்யுங்கள். வேறு மாற்று வழியில்லை.” இன்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா கட்சி பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்த செய்தியை தான் நான் புரிந்துக்கொண்டேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மலையக தமிழர்- பாஜக

இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான உங்கள் அவதானம் அதிகரிக்க வேண்டும் <பாஜக அமைச்சர் முருகன்,  அண்ணாமலை ஆகியோரிடம் மனோ தெரிவிப்பு> இந்தியாவை எந்த கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி  உங்கள் பாரதீய ஜனதா கட்சி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும்  பாரதீய ஜனதா கட்சியின் தமிழக கிளை தலைவர் கே. அண்ணாமலை ஆகிய நீங்கள் இருவரும்  உங்கள் […]

ரணில் சொல்வதை எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம்

மலையக மக்களின் பல்வேறு பட்ட  பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி நமது மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியாக பேச வேண்டும் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அதன்மூலம் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக மலையக தமிழ் மக்களும் வாழும் நிலை ஏற்பட வேண்டும் என நாம், […]

தமிழ் பேசும் கட்சிகள்

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு (Victoria Nuland)) தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் கூறினோம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இதுவே தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஏகோபித்த நிலைப்பாடாக இருந்தது என்ற  எம்பி மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த ஜனாதிபதிக்கு எதிரணி தலைவர் […]

மலையக தமிழர் பிரச்சினை பற்றியும் பேசாவிட்டால் நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்?

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனவரி 26 சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை. எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தை தொடர்பில்  அதிருப்தியை வெளியிட்டுள்ளார், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி. இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை […]

மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன்

வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் […]

இலங்கை வாழ் மலையக தமிழர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமூக நீதி கொள்கைக்கு ஏற்ப இலங்கை வாழ் மலையக தமிழர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை அயலகத்தமிழர் தின மாநாட்டில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆற்றிய உரையில் இதனை வலியுறுத்தியுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவளி தமிழர்களின் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி தமிழ்நாடு அரசு சென்னையில் இந்த மாநாட்டை நடத்தியது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழ் முற்போக்கு […]