வவுனியா: அதிர்ச்சியில் மக்கள்
வவுனியா குட்செட்வீதி, உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவம் தொடர்பாக […]
தந்தை பொல்லால் தாக்கி கொலை
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால் தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தில் மூன்று அண் பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய மூத்த மகன் கந்தப்பளை பொலிஸாரால் கைதும் செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, அயல் வீட்டார் […]