O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய”
O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக பஸ் சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான O?L பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 4 இலட்சத்து 72,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.