மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தான் மசூதியில் நேற்று (30) நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. தலிபான் பயங்கரவாதி நடத்திய இந்த தாக்குதலில் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெஷாவா் நகர மசூதியில் நேற்று (30) நண்பகல் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்தது. பலத்த பாதுகாப்பு மிக்க பெஷாவா் பொலிஸார் தலைமையக வளாகத்திற்குள் அமைந்துள்ள அந்த மசூதியில், […]

பாகிஸ்தானில் பேரூந்து விபத்து

பாகிஸ்தானில் இன்று (29) இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சுமார் 40 க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாட்டாவடா மாகாணத்தில் இருந்து கராச்சிக்கு சென்ற பஸ் வண்டியே இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமாகும்.