வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற தயார்
இலங்கையில் கடன் வழங்குபவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தமது திட்டத்தை அறிவிப்பதற்காக ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நேற்று பிற்பகல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக வங்கியின் தொடர்ச்சியான ஆதரவு
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரேசர் (Martin Raiser) உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி […]
இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் (photos)
கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (25) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் […]
சிறந்த பிரச்சாரம் ஒன்றை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீருவுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் “சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது. அண்மைய […]
ஜனாதிபதி அழைப்பு (Photos)
இன்னும் 25 வருடங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து ” அபிவிருத்தியடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு போட்டி எண்ணத்தை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் […]
ஜனாதிபதியின் நிலைப்பாடு
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின், மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரொட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்று […]
IMF-கடன் திட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். எரிபொருள் விலை, மின் கட்டணம், […]
சிங்கள தலைமைத்துவத்தை பாதுகாத்து தந்த தமிழ்த் தலைவர்கள் (Video)
வரலாற்றில் சிங்களத் தலைமைத்துவத்தை பாதுகாத்துத் தந்த தமிழ்த் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் நினைவுபடுத்தியிருந்தார். தமிழ்த் தலைவர்கள், சிங்களத் தலைமைத்துவத்தை உருவாக்கவும், இலங்கையை உருவாக்கவும் பாடுபட்டதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, தமிழ் – சிங்கள கலாசாரத்தை வேறுபிரிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். யாழ் கலாசார மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, ”வெசாக் தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்திய பொன்னம்பலம் ராமநாதன் அவர்களுக்கு நன்றி […]
நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பிரகாரம், திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி – திறைசேரி செயலாளருக்கு பணிப்புரை
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் திறைசேரி செயலாளருக்குவிக்ரமசிங்க, ப் பணிப்புரை விடுத்துள்ளார். முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் […]