பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம்-GL
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் இன்று (20) நள்ளிரவு முதல் ஜனாதிபதிக்கு கிடைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரீஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஆகவே தனக்குள்ள குறித்த அதிகாரத்தை ஜனாதிபதி பாவிப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார். கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு உடனடி நிவாரணம்
நெல் கொள்வனவு செய்ய மற்றும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு ஓய்வூதியப் பணிக்கொடை நிலுவைத் தொகையை வழங்குவதற்கு போசாக்கின்மையை குறைப்பதற்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு- உடனடியாக நிதி வழங்க ஜனாதிபதி பணிப்புரை. தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, […]
அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் இன்றைய நிலைமை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.