33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை
ஏப்ரல் மாதம் முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கல்வியற் கல்லூரி ஆசிரியர்களின் பெறுபேறுகள் மார்ச் 30ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இதன்படி, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த 7500 ஆசிரியர்களையும் பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.