CWC
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களுடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆகியோர் யாழ் நூலகத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பொன்றும் இடம்பெற்றது
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்
“நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது 75 வது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் […]