ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார்

பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்திற்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) தெரவித்துள்ளது. ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார் எனவும் நேற்று விஜயராமயில் கூடிய பொதுஜன பெரமுண தீர்மானித்ததாக பா.உ ரோஹித் அபேகுணவர்தன கூறியுள்ளார். அதேபோல் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

SLFP – பதில் பொதுச் செயலாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை (Sarath Ekanayake ) நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வௌிநாடு சென்றுள்ள காரணத்தினால் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

MY3

ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற ஊடகலியாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் எனவும் மைத்திரி தெரிவித்துள்ளார். எவ்வாறான அழுத்தங்களுக்கும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.