5,450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! ஊவா மாகண பற்றாகுறை நீங்குமா
தற்போதைய நிலையில் நாட்டில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை நீக்கும் முகமாக 5 ,450 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி இருக்கிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வின் விசேட அமைச்சரவை பத்திரத்தை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆசிரிய நியமனத்திலாவது ஊவா மாகணத்தில் தமிழ் உயர்தர மாணவர்கள் எதிர்நோக்கும் விஞ்ஞான கணித பிரிவு ஆசிரிய பிரச்சினை தீருமா என்று கேள்வியௌ ஊவா மாகண பெற்றோர் கேட்கின்றனர்
வட்டவளையில் பஸ் விபத்து – 18 பேர் காயம்
க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து நள்ளிரவு 12 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 01.08.2023 அன்று அதிகாலை 4.40 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது, பஸ்ஸில் 120 பேர் வரை பயணித்துள்ளனர். எனினும் 18 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர் .பஸ்ஸில் […]
கிழக்கில் வைத்திய மற்றும் சுகாதார அதிகாரிகள் குறித்து ஆளுநருடன் GMOA பேச்சு!
நூருல் ஹுதா உமர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்து வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறுவன் ஹம்திக்கு நடந்தது என்ன? மூத்த ஊடகவியலாளரான அஸிஸ் நிஸாருடீன்
இரண்டு சிறுநீரகங்களையும் சத்திர சிகிச்சையின் போது இழந்த ஹம்தி என்ற சிறுவனின் மரணமும், இலங்கையில் இயங்கி வரும் மருத்துவ மாபிஃயாவும் இன்று ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஹம்தியின் ஆரோக்கியமான வலது பக்க சிறுநீரகத்தை திருடிய “மாபிஃயா” மருத்துவர்கள், இந்த வலது சிறுநீரகம் பற்றி எவ்வித குறிப்புகளையும் மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்வதை திட்டமிட்டு தவிர்த்து வந்துள்ளதை ஹம்தியின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் போது தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது. குறித்த மருத்துவர்கள் ஒரு தப்புக் கணக்கு […]