ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார்
பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்திற்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) தெரவித்துள்ளது. ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார் எனவும் நேற்று விஜயராமயில் கூடிய பொதுஜன பெரமுண தீர்மானித்ததாக பா.உ ரோஹித் அபேகுணவர்தன கூறியுள்ளார். அதேபோல் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.