CSK முதல் வெற்றி

IPL தொடரின் 6வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ருதுராஜ் கெயிக்வாட் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். டேவன் கான்வே 29 பந்தில் 47 ரன்கள் குவித்தார். ஷிவம் டுபே, ராயுடு ஆகியோர் 27 ரன்கள் எடுத்தனர். […]