”Titanic” பாடகி மீண்டும் மேடைக்கு வருவாரா?
உலகப் புகழ்பெற்ற ”Titanic” பாடகி செலின் வரவிருக்கும் அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துள்ளார். செலின் உடல்நலக் குறைவு காரணமாக இந்த எதர்பாராத முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 2023 மற்றும் 2024 இல் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் சுற்றுப்பயணங்களையும் செலின் ரத்து செய்துள்ளார். 55 வயதான அவர், சிரமத்திற்கு வருந்துவதாக இரசிகர்களிடம் கூறியுள்ளார்.