நிலநடுக்க பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தநிலையில் நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு கிராமமே முற்றிலும் அழிந்துள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதற்கிடையே நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600-ஐ கடந்துள்ளது…
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600-ஐ கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு முன்னுரிமையளித்து மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். துருக்கியின் Hatay மாகாணத்தின் மருத்துவமனை ஒன்றுக்கு முன்பாக சடலங்கள் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டுள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது. துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 7,100 க்கு மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே 11 ஆண்டுகால போரினால் பேரழிவிற்குள்ளான சிரியாவில் தற்போதைய அனர்த்தத்தால் 2500-க்கும் அதிகாமானவர்கள் உயிரிந்துள்ளனர். மீட்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் […]
துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 700 ஆக அதிகரிப்பு
துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், […]
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவானது. காசியான் டெப் மாகாணம் நுர்நாகி நகரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 200 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]