நெல் அறுவடையை அதிகரிக்க திட்டம்

இலங்கையின் வருடாந்த நெல் அறுவடையயை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் ஒரு ஹெக்டயரில் இருந்து பெறும் நெல் அறுவடையை 5.5 மெட்ரிக் டொன் வரை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, 3 வருடங்களுக்குள் 4.7 மெட்ரிக் டொன் வரையும், 5 வருடங்களுக்குள் 5.1 மெட்ரிக் டொன் வரையிலும், 10 வருடங்களுக்குள் 5.5 மெட்ரிக் டொன் வரையிலும் நெல் அறுவடையை அதிகரிக்கும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலனீ […]

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பிரகாரம், திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.