அதிமுக – CWC கலந்துரையாடல்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், நேற்று (08.05.2023) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை கொழும்பில் உள்ள அமைச்சகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். மரியாதை நிமித்தம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை – இந்திய சமூதாய பேரவையின் சார்பில் சிவராமன் மற்றும் காந்தி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். […]