அமெரிக்க டொலர் மதிப்பை இழந்து வருகிறது – டிரம்ப்

அமெரிக்க டொலர் எதிர்காலத்தில் உலக தர நாணயமாக இருக்காது என அமெரிக்க முன்னாள் ஸனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகள் பொது நாணய அலகு ஒன்றை முன்மொழிந்து வரும் நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாலியல் குற்றச்சாட்டில் நேற்று நீதிமன்றில் முன்னிலையான ட்ரம்ப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.