அயர்லாந்தை அழ வைத்த இலங்கை
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. […]