ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்தது
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நேற்று (23) இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜூன் 04 ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 07 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன. உலகக் கிண்ண போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன் நடக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.