இலங்கை – ஆப்கானிஸ்தான் முதல் ODI இன்று, மதீஷவுக்கு வாய்பு
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை இன்றைய போட்டியில் IPLலில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.