உணவு ஒவ்வாமை மாணவர்கள் வைத்தியசாலையில்
உணவு ஒவ்வாமை காரணமாக நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (28.04.2023) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. எந்தவொரு மாணவருக்கும் ஆபத்தான நிலையில்லையெனவும், பெரும்பாலான மாணவர்கள் இன்று (28.04.2023) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கிளாசோ தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 5வரை 126 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. பாடசாலை நிர்வாகத்தாலேயே சமையல் பணி முன்னெடுக்கப்படுகின்றது. […]