கனடாவுக்கு சீனா பதிலடி

கனடா சீன இராஜதந்திரி ஜாவோ வெய்யை  நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதற்குப் பதிலடியாக, சீனா தனது ஷாங்காய் துணைத் தூதரகத்தில் உள்ள கனடாவின் தூதரக அதிகாரியான ஜெனிபர் லின் லலோண்டேவை பதவி நீக்கம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.