குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண.எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். விகாரைக்குச் சொந்தமில்லாத காணிகளை பொதுமக்களிடம் கையளிக்குமாறு பணிப்பரை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிந்தது. விகாரையை சுற்றிலும் பல்வேறு பௌத்த விஹாரைகளின் இடிபாடுகள் சிதறிக்கிடப்பதால் அங்குள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது பொறுத்தமற்றதெனவும் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் கடிதத்தில் […]