சீன ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி – ஜோ

சீன ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். சீனாவில் நேற்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் Xi Jinpingஐ சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இடம்பெற்ற சிறிது நேரத்தில் பைடன் இதனை  தெரிவித்துள்ளார். மேற்படி சந்திப்பில் சீன – அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதாக இணக்கம் எட்டப்பட்டது. இவ்வாறான இணக்கம் எட்டப்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை.