திருக்குறள் படிக்கும்போது புதிய அர்த்தங்கள் கிடைக்கும்
கலாச்சார ஒற்றுமைதான் இந்தியாவின் உயிர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின்கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு நேற்று நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, தமிழகம் வந்த பிஹார் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது: மிகவும் பழமை வாய்ந்த மொழியை கொண்டுள்ள மாநிலம் தமிழகம். உதாரணமாக, திருக்குறள் புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும்போதும், நமக்கு புதிய அர்த்தங்கள் கிடைக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.