தொழில் சட்டம் உருவாக உறுதுணையாக இருப்போம் – பாரத்
புதிய தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான அறிவு திறன் பொது மன்றத்தின் முதலாவது அமர்வு தொழில் அமைச்சில் இடம்பெற்றது. தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காணவும், டிஜிட்டல் தொழிலாளர் உலகத்திற்கு ஏற்றவகையில் தொழில் சட்ட அமைப்பைத் தயாரிப்பதற்காகவும் இவ் அமர்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாநயக்கார தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸின் உப தலைவரும் சர்வதேச […]