பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள்
கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் கட்டாரில் பணம் தருவதாக கூறி 6 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் 31 வயதுடையவர்கள்.