அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஹப்புத்தளை, பிளக்வுட் இளைஞன்
நீர்கொழும்பு – பலகத்துறை கடலில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. நேற்று (17) மாலை சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், கற்பாறைகளில் சிக்குண்டுள்ளதால் சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சடலத்தை மீட்கும் பணிகளில் பெக்கோ இயந்திரத்தையும் பயன்படுத்துவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற இளைஞர் காணாமற்போயிருந்தார். ஹப்புத்தளை, பிளக்வுட் தோட்டத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே அலையில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான […]