பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் – IMF
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். தனது விஜயத்தின் போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள எட்டுவதற்கான நிதி நடவடிக்கைகள், வருமான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய நேரத்திலும் வெளிப்படைத்தன்மையுடனும் கடனைப் பெறுவதற்கான உத்திகளைப் பற்றி கலந்துரையாடுமாறு இலங்கை அதிகாரிகளை தான் ஊக்குவித்ததாக கென்ஜி ஒகமுரா கூறியுள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி […]