பாகிஸ்தான் மசகு எண்ணெய் கொள்முதல்?
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான உத்தரவை ரஷ்யாவிடம் சமர்ப்பித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லும் முதல் ரஷ்ய கப்பல் வரும் மே மாதம் கராச்சி துறைமுகத்தை வந்தடைய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்கின்றன.