மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு
மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக விரிவான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா நகர அபிவிருத்தி, பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலைமையாக மாறும் எனவும் சுட்டிக்காட்டினார். மேல்மாகாண […]