யுபுன் அபேகோனுக்கு அபார வெற்றி

இலங்கை குறுந்தூர சாம்பியனான யுபுன் அபேகோன் 2023 சீசனுக்கான வெற்றிகரமான தொடக்கத்தை பெற்றுள்ளார். இந்த ஆண்டு பங்கேற்ற முதல் பந்தயத்தில் யுபுன் முதலிடம் பிடித்தார். இத்தாலியில் நேற்று (07) நடைபெற்ற “FIRENZE SPRINT FESTIVAL” நிகழ்வில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் யுபுன் அபேகோன் ஐந்தாவது தடத்தில் போட்டியிட்டதுடன் ஆரம்பம் முதலே வெற்றிகரமாக ஓடிய யுபுன் நிகழ்வில் முதலாம் இடத்தைப் பெற்றார்.