வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால்
வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று காலை சகல வர்த்தக நிலையங்களையும் மூடி வர்த்தக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்புடன் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை மக்கள் வழங்கியுள்ள நிலையில் , மக்கள் நடமாட்டமின்றி நகரங்கள் வெறிச்சோடிக் […]
வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று ஹர்த்தால்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடகிழக்கு அரசியல் கட்சிகள் இணைந்து இன்று (25) ஹர்த்தால் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இந்த ஹர்த்தால் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு – கிழக்கு ஹர்த்தால் இயக்கம் காரணமாக அந்த பகுதிகளில் தனியார் பேருந்துகளும் தடைபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்றைய பொது முடக்கத்துக்கு […]
யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு நிதி நன்கொடை
கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளருமான சரத் சேனநாயக்கவினால் தனது ஆவணப்படுத்தல் மற்றும் விரிவுரைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்குவதற்காக 2 மில்லியன் ரூபாவை இன்று (24) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த தொகையை வடக்கு,கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.