பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கையின் செயற்பாடு கவலயளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் நேற்று (19) ஆரம்பமாகியுள்ளது.
கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 21 ஆம் திகதி ஆணையாளர் வாய்மொழி மூல உரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான 51/1 தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி, ஊழல் மோசடிகளால் மனித உரிமைகளுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.