ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த சகல பொறுப்புகளில் இருந்தும் விலக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் அந்த கட்சிக்கு அறிவித்துள்ளதாக அவர் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
“இன்று மடுல்சீமை நகரில் ஒரு கூட்டத்தை சஜித் தலைமையில் ஒழுங்கு செய்திருந்தோம். ஆனால் சுகயீனம் காரணமாக தான் வரவில்லை என அவர் தெரிவித்தார்.
ஆனால் வெளிமடையில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு செல்வதை நான் கண்டேன். இதனால் எமது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் கட்சியில் நான் வகித்த சகல பொறுப்புகளில் இருந்தும் விலக முடீவு செய்துள்ளேன்” என்றார்.